மும்பை, மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டம் ஜப்தலை கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியின உறைவிடப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி விடுதியில் பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கி கல்வி பயின்று வந்தனர். 3 மாணவிகள் உயிரிழப்பு இதனிடையே, இந்த பள்ளி விடுதியில் நேற்று முன் தினம் இரவு மாணவியர் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, விடுதி அறைக்குள் புகுந்த பாப்பு அங்கிருந்த 6 மாணவிகளை கடித்தது. இதில் 8, 12 மற்றும் 14 வயதுடைய 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும், 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி உரிமம் ரத்து இந்நிலையில், பள்ளி விடுதியில் பாம்பு கடித்து 3 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த அரசு உதவி பெறும் பள்ளியின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பழங்குடியின உறைவிடப்பள்ளிகளில் ஆய்வு நடத்தி அதன் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மராட்டிய முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/snake-bite-kills-3-girl-students-maharashtra-cancels-school-license




