சென்னை, தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் ஸ்ரீநாத், தற்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். விஜயின் கல்லூரி நண்பரான ஸ்ரீநாத், திரையுலகிலும் அவருடன் இணைந்து பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எழுந்த விமர்சனங்கள் ஸ்ரீநாத் விஜயின் நெருங்கிய நண்பர் என்பதால் மட்டுமே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், பின்னர் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. சஞ்சீவ் விளக்கம் இந்த நிலையில், விஜயின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "வெறும் நண்பன் என்பதற்காக யாருக்கும் வாய்ப்பு கொடுக்கும் ஆள் விஜய் இல்லை. ஸ்ரீநாத் தூத்துக்குடி மண்ணின் மைந்தன். அந்தப் பகுதி மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் ஒரு மீனவர் என்பதால், அவருக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையை ஒப்படைத்துள்ளார்," என்றார். மேலும் அவர் கூறியதாவது, "முதலில் வேறு ஒருவருக்கு சீட் கேட்டுத்தான் ஸ்ரீநாத் வந்தார். ஆனால் அந்த நபரின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்று விஜய் முடிவு செய்தார். அதன் பிறகு 'நானே போட்டியிடட்டுமா?' என்று ஸ்ரீநாத் கேட்டார். உடனடியாக வாய்ப்பு கொடுக்காமல், சுமார் ஒரு மாதம் யோசித்த பிறகே விஜய் அவருக்கு சீட் வழங்கினார்," என்று சஞ்சீவ் தெரிவித்துள்ளார். வைரலாகும் சஞ்சீவின் பேச்சு நண்பர் என்பதற்காக அல்ல, தகுதி மற்றும் மக்கள் சேவையை கருத்தில் கொண்டே ஸ்ரீநாத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக சஞ்சீவ் அளித்த இந்த விளக்கம், தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vijay-isnt-the-type-of-person-to-hand-things-over-on-a-platter-just-because-someone-is-a-friend-actor-sanjeevs-remarks




