தூத்துக்குடி, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மேயர் ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் அருகில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆகஸ்ட் 9 முதல் சீரான குடிநீர் விநியோகம் இந்த ஆய்வின் போது மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வல்லநாடு பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை தூத்துக்குடி மாநகர பகுதி மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். சீரமைப்புப் பணிகள் முடிந்து வரும் 9.8.2026, ஞாயிற்றுக்கிழமை முதல் மாநகராட்சிப் பகுதிகள் முழுமைக்கும் மீண்டும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், கனகராஜ், முத்துவேல், மண்டல தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/regular-drinking-water-supply-from-august-9-thoothukudi-mayor-jagan-periyasamy-assures




