ஹாரர் படங்களின் மூலம் பேய்த்தனமான வெற்றிகளை குவித்து வந்த ராகவா லாரன்ஸ், அடுத்து புராண கதைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக 'மஹாவீர் கர்ணா'வை அறிவித்திருக்கிறார்கள். பூஜா ஹெக்டே மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தெலுங்கில் பல படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்கத்தில் 'மஹாவீர் கர்ணா' படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்போது ஒரே சமயத்தில் பல படங்களில் கவனம் செலுத்தி வருவதால், அவற்றின் அப்டேட்கள் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி. 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்குப் பிறகு லாரன்ஸின் லைன் அப் பலரையும் பிரமிக்க வைத்தது. 'அதிகாரம்', 'கால பைரவா', 'ஹன்டர்', 'பென்ஸ்', 'காஞ்சனா 4' என படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானராக மிரள வைத்தது. ஆனால், சில காரணங்களால் 'பென்ஸ்', 'காஞ்சனா 4' மட்டுமே டேக் ஆஃப் ஆனது. 'பென்ஸ்' படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இதில் லாரன்ஸுடன் நிவின்பாலியும், ரவிமோகனும் இணைந்து நடிக்கிறார்கள். பாண்டிச்சேரி, சென்னையில் அதன் படப்பிடிப்புகள் சில நாள்கள் நடந்திருக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அதாவது, சாய் அபயங்கர் இசையமைப்பாளராக முதலில் கமிட் ஆனது இந்த படத்தில் தான். ஆனால், இந்த படம் வேகம் எடுக்காமல் போனதால், சாய்யின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்களில் முந்திவிட்டன. இப்போது சென்னையில் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ரவிமோகனும் நடித்து வருகிறார். இந்த ஷெட்யூல் இன்னும் சில வாரங்கள் நீளும் என்கிறார்கள். படப்பிடிப்பில். அடுத்து ராகவலா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் 'காஞ்சனா 4'ம் வேகம் எடுத்து வருகிறது. லாரன்ஸின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'முனி'. அதன் வெற்றிக்கு பின் பேய் கதையை கையில் எடுத்தார். 'முனி 2'விற்கு 'காஞ்சனா' என டைட்டில் வைத்தனர். இப்போது 'காஞ்சனா 4' ஆக உருவாகி வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, நோரா பதேஹி என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். தவிர கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், கிங்ஸ்லி, சாய்தீனா, கருடா ராம் என 'காஞ்சனா' டீம் ஆட்களும் இருக்கிறார்கள். பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்த சூழலில் தான் இன்ன்னொரு ஹீரோயினாக நயன்தாராவும் இணைகிறார் என்ற பேச்சு இருக்கிறது. இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த கோடை விடுமுறையை தற்போது டார்க்கெட் ஆக வைத்திருக்கின்றனர். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா 'பென்ஸ்' அல்லது 'காஞ்சனா 4' படங்களின் அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்த்த சுழலில்தான் 'மஹாவீர் கர்ணா' அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டோலிவுட் ரமேஷ் வர்மா இயக்கும் இப்படத்தில் பிரமாண்டமான சிறப்பு அரங்குகள், புராண காலத்தை கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்புகள், அசர வைக்கும் போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பம் என அனைத்தும் சேர்ந்து, மொத்தத்தில் ஒரு பிரமிக்க வைக்கும் காட்சி விருந்தாக இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது என அறிவித்துள்ளனர். இந்த படம் குறித்து விசாரித்தால் லாரன்ஸின் முந்தைய படமான 'கால பைரவா' டீம் தான் 'மஹாவீர் கர்ணா'வையும் எடுக்க உள்ளது என்கிறார்கள். காரணம் அதன் இயக்குநரும் ரமேஷ் வர்மா தான். லாரன்ஸ் இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குகிறது. இதுவும் அடுத்தாண்டு வெளியீடு தான். படத்திற்கு ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இருப்பதை கருத்தில் கொண்டு இப்போதே டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிவித்துள்ளனர் என்கின்றனர். இது தவிர, அடுத்து ஒரு படத்தை இயக்கி நடிக்கவும் திட்டமிட்டுள்ளார் லாரன்ஸ். அதன் ஸ்கிரிப்ட் வேலைகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளனவாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/raghava-lawrence-movie-lineups-and-updates




