திருமலை, பிரம்மோற்சவ விழாவில் அனுமன், தங்க யானை வாகன வீதிஉலா முன்னால் சிங்கப்பூர், ஜெர்மனி நாட்டு கலைஞர்கள் நடனம் ஆடி அசத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகன வீதிஉலா, இரவு தங்க யானை வாகன வீதிலா நடந்தன. அனுமன் வாகன வீதிஉலா முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. சிங்கப்பூர் கலைஞர்கள் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி, மராட்டியம், ஒடிசா, பீகார், கர்நாடகா, மணிப்பூர், காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர்கள், தங்கள் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் மூலம் அந்தந்தப் பகுதிகளின் கலாசாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி அசத்தினர். நேர்த்தியான நடன நிகழ்ச்சிகளும், இசைக்கருவி வாசிப்புகளும் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. திருப்பதி பிரம்மோற்சவ விழா, கலைநிகழ்ச்சி அத்துடன் பக்தி, பாரம்பரியம் மற்றும் கலைத்திறன் ஆகியவை இணைந்த கலாசார நிகழ்ச்சிகள், அனுமன் வாகனச் சேவைக்கு மேலும் சிறப்பைக் கூட்டின. அனுமன் வாகன ஊர்வலத்தைக் கண்ட பக்தர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் கண்கொள்ளா காட்சியாக அமைந்தன. ஆக மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 25 கலாசாரக் குழுக்களை சேர்ந்த மொத்தம் 681 கலைஞர்கள் அனுமன் வாகனச் சேவையில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர். ஜெர்மனி கலைஞர்கள் அதேபோல் நேற்று இரவு நடந்த தங்க யானை வாகன வீதிஉலாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் சிறப்பான கலைநிகழ்ச்சிகளை வழங்கி பக்தர்களை மகிழ்வித்தனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த கலைஞர்கள் என மொத்தம் 19 கலைக்குழுக்களில் இடம்பெற்ற 528 கலைஞர்கள் தங்க யானை வாகனச் சேவையில் பங்கேற்று தங்களது கலை நிகழ்ச்சிகள் மூலம் கோவிலின் நான்கு மாட வீதிகளுக்கு தனிச்சிறப்பை ஏற்படுத்தினர். அதில் ஜெர்மனியைச் சேர்ந்த கலைக்குழு வழங்கிய லட்சுமி நரசிம்மர் நடனம் சிறப்பு கவனம் பெற்றது. ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்ற இந்த நடனத்தின் மூலம் இந்திய கலாச்சாரம், பாரம்பரிய கலைகள் மீதான தங்களது பற்றையும் பக்தியையும் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/tirupati-brahmotsavam-singapore-and-germany-artists-performances-during-vahana-seva




