இயக்குநர் லீ க்ரோனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தற்போது ஓ.டி.டி. வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதன்படி, ‘லீ க்ரோனின்ஸ் த மம்மி’ திரைப்படம் வருகிற 17-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் லீ க்ரோனின் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி வெளியான திரைப்படம் ‘லீ க்ரோனின்ஸ் த மம்மி’. திகில் படங்களின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள லீ க்ரோனின், இந்த படத்தில் ‘தி மம்மி’ கதையை வித்தியாசமான கோணத்தில் திரையில் கொண்டு வந்துள்ளார். இப்படத்தில் ஜாக் ரெய்னர், லாயா கோஸ்டா, மே காலமாவி, நடாலி கிரேஸ் மற்றும் வெரோனிகா பால்கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திகில் மற்றும் அதிரடி அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. என்ன கதை? ஒரு பத்திரிகையாளரின் இளம் மகள் பாலைவனத்திற்கு சென்றபோது திடீரென காணாமல் போகிறார். பல ஆண்டுகளாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பெண் மீண்டும் தனது குடும்பத்திடம் திரும்புகிறார். நீண்ட காலத்துக்கு பிறகு மகளை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இருக்கும் நிலையில், அவரது நடவடிக்கைகளில் ஏற்படும் வித்தியாசமான மாற்றங்கள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மகளின் வருகை மகிழ்ச்சியான தருணமாக மாறும் என எதிர்பார்த்த நிலையில், அது படிப்படியாக ஒரு பயங்கரமான அனுபவமாக மாறுகிறது. ஓ.டி.டி. ரிலீஸ் பழமையான சாபம், மர்மமான சம்பவங்கள், அதிரடியான காட்சிகள் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் பின்னணி இசை என திகில் ரசிகர்களை கவரும் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் தற்போது ஓ.டி.டி. வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதன்படி, ‘லீ க்ரோனின்ஸ் த மம்மி’ திரைப்படம் வருகிற 17-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் வெளியானபோது கவனம் ஈர்த்த இப்படம், தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பது திகில் மற்றும் ஹாரர் படங்களை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/ott/a-treat-awaits-horror-fans-lee-cronins-the-mummy-to-release-on-ott



