தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக விமர்சித்தார் என்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்க்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்". மார்க்கண்டேயன்டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்; கோபத்தில் வெளியேறிய எதிர்க்கட்சிகள் - காரணம் 'திரிணாமுல்' மார்க்கண்டேயனின் சர்ச்சைப் பேச்சு: "சட்டமன்றத்தைப் பூட்டுவேன் என்று விஜய் கூறுவது வேடிக்கையானது. சட்டமன்றத்தைப் பூட்டினால் எலும்பு இருக்காது. அதை உடைத்துவிட்டுத்தான் அடிப்பார்கள். கைது செய்துவிடுவார்கள் என்று பயந்து நள்ளிரவில் கேரவனில் கரூரிலிருந்து ஓடியது நீ தான். நாங்கள் உன்னைப் பார்த்துப் பயந்து ஓடவில்லை. சட்டமன்றத்தில் முதலமைச்சர் கம்பீரமாக அமர்ந்திருக்கும் போது, நீ கொத்து புரோட்டா போடுவதைப் பற்றிப் பேசுகிறாய். உன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான புரோட்டாக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்". என பேசிய குறிப்பிடத்தக்கது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க… — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 20, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/kanimozhi-condemns-markandeyan-arrest-over-vijay-remarks




