சென்னை, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்! ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது… — CMOTamilNadu (@CMOTamilnadu) September 5, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/may-teachers-selfless-dedication-brighten-students-future-chief-minister-vijay-greeting



