ஹராரே, வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஜிம்பாப்வே கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் வங்காளதேச அணியினர் அதிரடியாக விளையாடினர். சைப் ஹசன், தன்சித் ஹசன் இருவரும் அதிரடியாகி விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை, பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர்.பின்னர் சீரான இடைவெளியில் வங்காளதேச அணி விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-t20-bangladesh-team-piles-up-186-runs




