ஆலங்குளம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் ஸ்ரீமன் ராமசாமி மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெண்களின் பெருமையை போற்றும் வகையில் ஆலங்குளம் மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரு கணவரும் தங்கள் மனைவிக்கு ரோஜா மலர் கொடுத்து தலையில் சூட்டிவிட்டு அன்பை வெளிப்படுத்தினர். தம்பதிகள் கையில் மஞ்சள் கயிறு கட்டி ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். வாழ்க்கையில் இன்ப துன்பங்களில் பிரியாமல் துணை நிற்கும் மனைவிகளின் கரங்களை பற்றிக்கொண்டு கணவர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு வாழைப்பழம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இல்லற வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்க அதற்கான வழிமுறைக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த 200 தம்பதிகள் பங்கேற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/event-honoring-wives-at-temple-festival-200-couples-participate




