ஹைதராபாத்தைச் சேர்ந்த 'AdOnMo' நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரவந்த் கஜுலா, தனது LinkedIn பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு, தற்போது ஸ்டார்ட்அப் உலகத்தில் பேசுபொருளாகியுள்ளது. 2016-ல் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த, ஆங்கிலம் பேசத் தெரியாத ஒரு டாக்ஸி ஓட்டுநரை தனது நிறுவனத்தின் முதல் ஊழியராக அவர் வேலைக்கு அமர்த்தியுள்ளார். இன்று, பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே ஊழியர் அந்நிறுவனத்தின் 'Procurement Head'-ஆக உயர்ந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தொடக்கமும் தேடலும்: ரெஸ்யூமைத் தாண்டிய தேர்வு! டிஜிட்டல் Out-of-Home (DOOH) விளம்பரத் துறையில் இயங்கிவரும் AdOnMo நிறுவனம், கடந்த 2016-ல் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. நிறுவனத்தின் ஆரம்பகட்டத்தில், வழக்கமான கல்வித் தகுதி, கார்ப்பரேட் அனுபவம் அல்லது சரள ஆங்கிலப் புலமை ஆகியவற்றை நிறுவனத்தின் அளவுகோலாக நிறுவனர் ஸ்ரவந்த் கஜுலா வைக்கவில்லை. மாறாக, ஒருவரின் கற்றுக்கொள்ளும் ஆர்வம், நேர்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளித்து தனது முதல் ஊழியரைத் தேர்வு செய்தார். திறன் வளர்ப்பும் நிறுவனத்தின் வளர்ச்சியும் அந்தப் பதிவின்படி, நிறுவனத்தில் இணைந்த அந்த நபருக்கு ஆங்கிலம் மற்றும் பிற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வளர்ச்சியோடு இணைந்து அவரும் தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக்கொண்டார். இதன் பலனாக, தற்போது இந்தியா முழுவதும் கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் 'Procurement Head' பதவியில் முத்திரை பதித்து வருகிறார். ஸ்டார்ட்அப் உலகம் எழுப்பும் கேள்விகள் தற்போது பல முக்கிய நகரங்களில் தனது டிஜிட்டல் விளம்பரத் திரைகளை விரிவுபடுத்தி வெற்றிகரமாக இயங்கி வருகிறது AdOnMo. இந்த நிலையில், ஸ்ரவந்த் கஜுலாவின் இந்தப் பதிவு, "பட்டப் படிப்புகளையும் மொழித் திறமையையும் மட்டுமே முதன்மையாகப் பார்க்காமல், திறமைக்கும் கடின உழைப்புக்கும் வாய்ப்பளித்தால் சாதாரண மனிதர்களும் இத்தகைய உயரங்களைத் தொட முடியும்" என்ற விவாதத்தை ஸ்டார்ட்அப் வட்டாரத்தில் தீவிரமாக ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/business/companies/without-a-resume-the-inspiring-story-of-a-founder-indias-startup-world-is-talking-about




