தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷ மாத்திரையை சாப்பிட்ட நபர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடும்ப தகராறில் விஷ மாத்திரை சாப்பிட்டவர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (வயது 42). மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த சுரேஷ், கடந்த 20-ம் தேதி பன்றிக்கு வைக்கும் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழப்பு அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சி கிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/man-dies-after-consuming-poison-pill-in-family-dispute




