நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 5-வது முறையாக கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். காலிறுதிக்கு முன்னேற்றம் 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ், 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் டாமி பாலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 5-வது முறையாக காலிறுதி இந்த வெற்றியின் மூலம் கார்லஸ் அல்காரஸ் 5-வது முறையாக அமெரிக்க ஓபன் தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் அமெரிக்க வீரர் ஷெல்டனை நாளை எதிர்கொள்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-carlos-alcaraz-in-the-quarterfinals-for-the-5th-time




