திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். தரிசனம் திருமலையில் நேற்று மொத்தம் 82 ஆயிரத்து 105 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.5.18 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், 34 ஆயிரத்து 484 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். லட்டு விற்பனை 4.17 லட்சமாகவும், அன்னபிரசாதம் பெற்ற பக்தர்கள் எண்ணிக்கை 2.60 லட்சமாகவும் பதிவாகியுள்ளது. மருத்துவ சேவைகளை 3,790 பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர். பக்தர்கள் கூட்டநிலை காரணமாக, சிலாதோரணம் வரை வெளிப்புற வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். எஸ்.எஸ்.டி.டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 15 முதல் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/tirumala-tirupati-hundi-collection-one-day-5-18-crore




