கடலூர், 21-ம் நூற்றாண்டிலும் சாதி ரீதியாக தகராறு செய்த மக்களால் மற்றொரு தரப்பினர் கடும் வேதனையில் உள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தில் ஆடல், பாடல் நடத்தக்கூடாது என மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விநாயகர் சிலையை அந்த வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி, பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் சாலையில் ஒரு தரப்பினர் 3 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்களை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தி அவர்கள் “தலை மீது செருப்பு வைத்து” செல்லுமாறும் இந்த பாதை வழியே சென்றால் ”சாணியால் அடிப்போம்” என்று கூறியதாக மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், 5 வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, வீடுகளை அடித்து நொறுக்கியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். 21-ம் நூற்றாண்டிலும் சாதி தகராறு. இதில் ஒரு தரப்பை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் கரிக்குப்பம் கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, “21-ம் நூற்றாண்டிலும் இதுபோன்ற சாதி தகராறு எதற்காக?” என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-caste-conflict-still-present-in-the-21st-century-villagers-anguished-by-clash-near-chidambaram




