சென்னை, தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. இதற்கிடையில் மாலையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிராம் ரூ.14,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-rs-2360-per-sovereign-todays-rates




