கிளாஸ்கோ, 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. குத்துச் சண்டை பிரிவில் மட்டும் இதுவரை இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கம், 2 வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனைகள் சாக்ஷி, பிரீத்தி, ஜேஸ்மின், பிரியா, அருந்ததி சவுத்ரி ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச் தங்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சச்சின் சிவாச், நமீபியா வீரர் என்டிவெலோ உடன் மோதினார். இந்த போட்டியில் 3-2 என்ற புள்ளி கணக்கில் சச்சின் சிவாச் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்தியா 12 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் என 36 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/commonwealth-potti-kuththu-sandaiyil-indiyavukku-melum-oru-thangam




