ஜெய்ப்பூர், ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள ஜோத்பூர் விமான நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைத்தார். ஜோத்பூர் விமான நிலையம் ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி இன்று காலை ஜோத்பூர் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஹரிபாவ் பகாடே, மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் மற்றும் ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ஜோத்பூர் விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுமார் 23 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 480 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையம், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வரை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்தை பறைசாற்றும் கட்டிடக்கலை பயணிகளுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், இந்த முனையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் அரச பாரம்பரியத்தை பறைசாற்றும் கட்டிடக்கலையுடன், வளைவுகள் மற்றும் ‘ஜரோகா’ எனப்படும் பாரம்பரிய ஜன்னல்கள் போன்ற அம்சங்களை நவீன வடிவமைப்போடு ஒருங்கிணைத்து இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘உடான்' திட்டம் புதிய முனையத்தை திறந்து வைத்த பின்னர், பிரதமர் மோடி திருத்தப்பட்ட 'உடான்' (UDAN) திட்டத்தையும் இன்று தொடங்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 28,840 கோடி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், விமானப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தானின் பலோத்ராவில் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். இந்த திட்டங்கள் நகர்ப்புற போக்குவரத்து, ரெயில்வே உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/new-terminal-building-at-jodhpur-airport-prime-minister-modi-inaugurates-it




