லக்னோ நள்ளிரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, செலவுக்கு பணம் தர மறுத்த மாமனாரை இளம்பெண் திட்டம் போட்டு தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கல்யாண்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வினீத் மினோச்சா (வயது 63). இவருடைய மகன் சுப்ராத். மருமகள் ஷாலு மினோச்சா. இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை 3 மணியளவில் உடலின் பல்வேறு பகுதிகளில் 26 கத்திக்குத்துகளுடன் வினீத் வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. அதனால், இது வேறு நோக்கத்திற்காக நடந்துள்ளது என போலீசார் முடிவு செய்தனர். தீவிர விசாரணையில், மருமகள் ஷாலு திட்டமிட்டு மாமனாரை தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ரூ.6 லட்சம் இதற்காக அவர் கொலையாளிகளுக்கு ரூ.6 லட்சம் வாடகையாக பணம் தர முன்வந்துள்ளார். இதன்படி, வீட்டில் வேலை செய்த முன்னாள் பணியாளரான விஷால் கவுதம் என்பவரை தொடர்பு கொண்டிருக்கிறார். அவருக்கு ரூ.2 லட்சம் முன்பணம் தந்திருக்கிறார். அவர், கூட்டாளி ராஜ் கிஷோர் என்பவரை, ரூ.30 ஆயிரம் முன்பணம் கொடுத்து உதவிக்கு அழைத்து வந்துள்ளார். ஷாலு வீட்டின் உண்மையான சாவியை கவுதமிடம் கொடுத்து, போலியான சாவியை தயாரிக்க உதவியுள்ளார். விசாரணையில், ஷாலு, கணவர் மற்றும் குழந்தையுடன் நள்ளிரவில் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டியில் கணவருடன் ஒன்றாக பாடலுக்கு நடனம் ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எனினும், அவர் கவுதமுக்கு வேண்டிய தகவல்களை அவ்வப்போது அளித்து வந்துள்ளார். தடுத்த பாதுகாவலர் கவுதம், ராஜ் கிஷோர் இருவரும் வீட்டுக்கு சென்றபோது, அவர்களை பாதுகாவலர் மதன் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால், உடனே ஷாலுவை தொடர்பு கொண்ட கவுதம் விவரங்களை கூறியுள்ளார். இதனால், மருந்துகளை வினியோகிக்க அவர்கள் வந்துள்ளனர். அவர்களை உள்ளே விடும்படி மதனிடம் ஷாலு கூறியுள்ளார். இதன்பின்னர், இருவரும் போலி சாவி உதவியுடன் வீட்டுக்குள் புகுந்து வினீத் படுக்கையறையில் மறைந்து கொண்டனர். அவரை தலையணையால் அமுக்கி மாரடைப்பால் இறந்து விட்டார் என காட்டவே திட்டமிட்டு உள்ளனர். ஆனால், அவர்களை வினீத் பார்த்ததும் கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு பார்ட்டி வினீத் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அதிகாலை 4.13 மணியளவில் கணவர், குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தது பற்றி அறிந்து, அதிர்ச்சியடைந்தது போன்று காட்டி கொண்டார். போலீசாரின் விசாரணையின்போதும், அப்பாவி போன்று செயல்பட்டுள்ளார். எனினும், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். வீட்டில் சி.சி.டி.வி. வைப்பதற்கு ஷாலு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். நள்ளிரவு பார்ட்டிக்கு செல்ல கூடாது என்றும், அதற்கு பணம் தர மறுத்தது மற்றும் இரவு வெகுநேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது என பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை வினீத் விதித்தது ஷாலுவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதில், ஆத்திரமடைந்து அவர் இந்த படுகொலையை திட்டமிட்டு செய்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். சம்பவத்தன்று, ஷாலு மற்றும் கவுதம் 14 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். கடந்த சில தினங்களில் 300-க்கும் மேற்பட்ட முறை அவர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுவும் சம்பவத்துடன், ஷாலுவுக்கான தொடர்பை உறுதிப்படுத்தி உள்ளது. எனினும், கணவர் சுப்ரத்துக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/ban-on-midnight-party-young-woman-kills-father-in-law-over-expenses



