மதுரை, மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரெயில் உள்பட பல்வேறு ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளன. திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், சில ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு ரெயில் (எண்: 16848): ஆகஸ்ட் 1, 2, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் கீரனூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். நாகர்கோவில் மும்பை சி.எஸ்.டி.எம். விரைவு ரெயில் (எண்: 16352): ஆகஸ்ட் 2 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு ரயில் (எண்: 12666): கொடைரோடு, திண்டுக்கல் ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். குருவாயூர் சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (எண்: 16128): ஆகஸ்ட் 1, 2, 3, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண் டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். கன்னியாகுமரி ஐதராபாத் விரைவு ரெயில் (எண்:17070): ஆகஸ்ட் 7-ந்தேதி கொடைரோடு, திண்டுக்கல் ரெயில் நிலையங்களைத் தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். பகுதியாக ரத்து: பாலக்காடு டவுன் திருச்சி விரைவு ரெயில் (எண்: 16844) ஆகஸ்ட் 1, 4, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பாலக்காடு டவுன் முதல் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். புகளூர் முதல் திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-engineering-work-in-madurai-division-trains-to-the-southern-region-to-operate-via-diverted-routes




