ஐதராபாத், தெலுங்கானா ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் எலூர் நகருக்கு இன்று அதிகாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 42 பேர் பயணித்தனர். விபத்து 6 பேர் பலி இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் சூர்யபேட்டை மாவட்டம் கொடட் மண்டல் பகுதியில் ஐதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/telungana-bus-lorry-mothi-kora-vipathu-6-per-pali



