தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு ஏற்கனவே பழக்கமான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த சந்தோஷ்(24) என்பவரும் திருவிழாவுக்கு வந்துள்ளார். பாலியல் தொல்லை இந்நிலையில் சிறுமியிடம் திருமணம் செய்துக் கொள்வதாக, ஆசை வார்த்தைகளை கூறி தனியாக அழைத்து சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். சிறுமியுடன் சந்தோஷ் செல்லவதை பார்த்த, அடைக்கதேவன் பகுதியை சேர்ந்த அரவிந்த்(20), அவரது நண்பர்களான சோலைக்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(18) மற்றும் 17,15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என நான்கு பேரும் பின்தொடர்ந்து அந்த இடத்துக்கு சென்றுள்ளனர். மேலும், சந்தோஷை விரட்டிவிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அவரிடம் கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்று முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதற்கிடையில், சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் கிராமத்தில் உள்ள சிலருக்கு தெரியவந்தது. அவர்கள் சேதுபாவாசத்திரம் போலீஸில் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ், அரவிந்த், ஆறுமுகம் மற்றும் இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதையறிந்த சிறுமியின் தாய் சேதுபாவாசத்திரம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கூட்டு பாலியலில் ஈடுபட்ட, ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/sexual-torture-two-boys-among-5-persons-arrested-in-pocso-case




