மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதியம் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு இன்று மாலை 4.20 மணியளவில் வரும் அமித் ஷா ரமண ஆசிரமத்துக்குச் சென்று, அங்கு சுமார் 1 மணிநேரம் நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு, அண்ணாமலையார் கோயிலில் மாலை 6 மணியளவில் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து, சாலைவழியாக இரவு 7 மணியளவில் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் காவலர்களுக்கு அமித்ஷா விருது வழங்குகிறார். அமித்ஷா அமித்ஷா வருகையையொட்டி, திருவண்ணாமலையில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மைதானம் மற்றும் கிரிவலப்பாதை உண்ணாமலை அம்மன் நகரில் ஹெலிபேடுகள் தயார்ச் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இங்கு ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகையும் பார்க்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வந்தனா கார்க், எஸ்.பி உதயகுமார் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை பாதுகாப்பு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். டிரோன்கள் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்புடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/amit-shah-to-visit-tiruvannamalai-this-evening-security-arrangements-intensified




