தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம், துணைத்தலைவர் அந்தோணி முத்துராஜா ஆகியோர் சென்னை தெற்கு ரெயில்வே முதன்மை பயணிகள் போக்குவரத்து துணை இயக்குதல் மேலாளர் பிரமோத் பி.ஷெனாயிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்னர். அந்த மனுவில், தூத்துக்குடியில் இருந்து காலையில் மதுரை, போடிநா யக்கனூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட ஏதாவது நகரத்துக்கு நேரடி ரெயில் இயக்க வேண்டும், தூத்துக்குடி-மேட்டுப்பாளை யம் வாரம் இருமுறை ரெயிலை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும், தூத்துக்குடி-நரசப்பூர் ரெயிலை நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும். தூத்துக்குடி-சென்னை முத்துநகர் அதிவிரைவு ரெயிலை காலை 7 மணிக்குள் சென்னை எழும்பூர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி-பாலக்காடு, பாலக்காடு-தூத்துக்குடி விரைவு ரெயிலில் இரண்டடுக்கு ஏ.சி பெட்டி இணைக்க வேண்டும். இந்த ரெயில் காலை 10 மணிக்குள் பாலக்காடு சென்றடையவும், மாலை 6 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படவும் ஏற்பாடு செய்ய வேண்டும். மதுரை-சென்னை வாரம் இருமுறை ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும், மதுரை லோக்மானிய திலக் வாராந்திர ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும், மைசூர்-தூத்துக்குடி விரைவு ரெயில் காலை 9.30 மணிக்குள் தூத்துக்குடியை வந்து சேர நடவ டிக்கை எடுக்க வேண்டும். நெல்லை-கன்னியாகுமரி-நெல்லை ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும், தூத்துக்குடி-கச்சுக்குடா-தூத்துக்குடி விரைவு ரெயிலுக்கு தூத்துக்குடி மேலூரில் நிறுத்தம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-to-operate-vande-bharat-train-between-thoothukudi-chennai




