பெரியபாளையம், சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி மணவாள பெருமானுக்கு 14-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதாவது ஒரு நாளில் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், திருமணம் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், திருமணம் தொடர்பான வேண்டுதலை செய்பவர்கள், மாலை அணிந்து கொண்டு கோவிலை ஆறு முறை வலம் வந்தால் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை. சிறப்பு அபிஷகம் அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் இக்கோவிலில் ஆண்டுதோறும் வள்ளி மணவாளப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் 14-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 7 மணிக்கு மூலவருக்கு16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், கல் அங்கி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவம் காலை 9 மணிக்கு வள்ளி மணவாளப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதன் பின்னர், திருக்கல்யாண கோலத்தில் வள்ளி, முருகப் பெருமான் உற்சவர்கள் மண்டபத்தில் எழுந்தருள, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதியம் கைலாய வாத்தியம், மங்கள வாத்தியம், சங்கநாதம் முழங்க சுவாமி உள்பிரகார புறப்பாடு ஆறு முறை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/lord-valli-manavalan-thirukalyanam-at-siruvapuri-murugan-temple




