புதுடெல்லி, இந்தியா - இஸ்ரேல் இடையிலான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் இன்று முதல் (04.07.2026) அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்தியா - இஸ்ரேல் இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- புதுடெல்லியில் 2025 செப்டம்பர் 8ம் தேதி அன்று இந்திய குடியரசு அரசாங்கத்திற்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIA), இன்றைய தேதியிலிருந்து, அதாவது 2026 ஜூலை 4 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஒப்பந்தம், இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும், பாதுகாப்பான மற்றும் கணிக்கக்கூடிய முதலீட்டுச் சூழலை உறுதி செய்வதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. சர்வதேச முதலீட்டுச் சட்டத்தின் நவீன கோட்பாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சட்ட நடைமுறைகளை உள்ளடக்கியுள்ள இந்த ஒப்பந்தம், முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வலுவான பாதுகாப்பை அளிப்பதோடு, அதே வேளையில் நியாயமான பொது கொள்கை நோக்கங்களுக்கு ஏற்ப இறையாண்மை சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையையும் தக்கவைத்துக் கொள்கிறது. பொருளாதார கூட்டாண்மை இந்த ஒப்பந்தம் எல்லை தாண்டிய முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIA) 2026-ன் விவரங்களை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/india-israel-bilateral-investment-agreement-bia-comes-into-force-today




