சென்னை, மாவட்ட கலக்டரின் சீரிய முன்னெடுப்பில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் ஹூண்டாய்மொபிஸ் நிறுவனத்தின் வாயிலாக சென்னை மாவட்டத்தில் உள்ள 18 அரசு பள்ளிகளுக்கு ரூ.70 லட்சம் செலவில் 900 பெஞ்ச் டெஸ்க் வழங்கும் விழா சென்னை எழும்பூர் மாகாண மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அமைச்சர் ராஜ்மோகன் சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் மாணவர்களுக்கு பெஞ்ச் டெஸ்க் வழங்கி விழா பேருரை ஆற்றினார்கள். மேலும் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கலந்து கொண்டனர் பள்ளி கல்வித்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தரமோகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் ஹூண்டாய்மொபிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ஹூ மின் ஹோ, நரசிம்மன் தலைவர் பெரு நிறுவன சமூக பொறுப்புத்துறை நிகழ்வில் கலந்து கொண்டனர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் விழாவில் நன்றியுரை ஆற்றினார். உடன் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/hyundai-provided-benches-and-desks-to-18-government-schools-in-chennai




