புதுடெல்லி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், தமிழ் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 85-வது நிறுவன தினம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் (சிஎஸ்ஐஆர் 85-வது நிறுவன தின விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு, தேசிய அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த புதிய அறிவியல் இதழ்களை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். தமிழில் ‘அறிவியல் அறிக்கையாளர்’ இந்திய மொழிகளில் அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் இந்த இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழில்: ‘அறிவியல் அறிக்கையாளர்’ அசாமி மொழியில்: ‘பிக்யான் லஹர்’ பெங்காலி மொழியில்: ‘பிக்யான் பிரித்தாந்தோ’ மராத்தி மொழியில்: ‘விக்ஞான் க்ஷிதிஜ்’ தெலுங்கு மொழியில்: ‘விக்ஞான் வெலுகு’ ஆகிய பெயர்களில் இந்த புதிய அறிவியல் இதழ்கள் வெளியிடப்பட்டு உள்ளன. ஏற்கனவே ஆங்கிலம், இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் இந்த இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த 5 மொழிகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்பகமான அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய சாதனைகள் மற்றும் விண்வெளி முன்னேற்றங்களை வாசகர்கள் தங்களது தாய்மொழிகளிலேயே எளிதாக படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இதற்காக செயற்கை நுண்ணறிவு உள்பட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தகவல்கள் துல்லியமாக மொழிபெயர்க்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இதழில் பிரசுரிக்கப்படுகின்றன. அறிவியல் ஆர்வம் இதுமட்டுமின்றி, அந்தந்த மொழிகளில் உள்ளூர் நிபுணர்கள் எழுதும் நேரடி கட்டுரைகளும் இந்த இதழ்களில் இடம்பெற உள்ளன.மத்திய அரசின் இந்த புதிய முயற்சி, கிராமப்புற மாணவர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் அறிவியல் ஆர்வத்தை பெருமளவில் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/new-science-journals-in-five-indian-languages-including-tamil-launched-by-union-minister-jitendra-singh




