சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:- வேலூர் - 104.72° பாரன்ஹீட் (40.4° செல்சியஸ்) திருச்சி - 104.18° பாரன்ஹீட் (40.1° செல்சியஸ்) ஈரோடு - 103.28° பாரன்ஹீட் (39.6° செல்சியஸ்) பாளையங்கோட்டை - 102.92° பாரன்ஹீட் (39.4° செல்சியஸ்) தஞ்சாவூர் - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்) கரூர் பரமத்தி - 101.66° பாரன்ஹீட் (38.7° செல்சியஸ்) நாமக்கல் - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்) மதுரை விமான நிலையம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்) திருத்தணி - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/weather/heatwave-in-9-locations-in-tamil-nadu-today




