Full Article
மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய அர்ஜுன் தாஸ், ``'கான்சிட்டி' ஒரு நடுத்தரக் குடும்பத்தின் எதார்த்தமான கதையை, நகைச்சுவை மற்றும் எமோஷன் கலந்து சொல்லும் படமாக இருக்கும். மின்சார வாரியத்தில் வேலை செய்யும் 'சரவணன்' என்ற ரிலேட்டபிளான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் நடித்த 'கைதி', 'மாஸ்டர்', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் எனது கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க கெட்டவர்களாக இல்லாமல், ஒரு பின்னணியைக் கொண்ட 'லைக்கபிள் வில்லன்'களாகவே இருந்தன. அதுதான் ரசிகர்களுக்குப் பிடிந்திருந்தது. “ப்ரீத்தி முகுந்தனும் அபிராமியும் ஃபைட் பண்ணினதை ரசிச்சேன்!” - நடிகர் அர்ஜுன் ஆனால், தியேட்டர் ரவுண்ட்ஸ் செல்லும்போது, ரத்தம், வெட்டு, குத்து இல்லாத குடும்பப் படங்கள் பண்ணுங்க என்று குடும்ப ஆடியன்ஸ் கேட்டுக்கொண்டனர். அதனால்தான் இப்போது எனது லைன்-அப்பில் குடும்பங்கள் ரசிக்கும்படியான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். நான் அஜித் சாரின் தீவிர ரசிகன். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மூலமாக அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் நான் நடித்த 'ஜானி ஜாமி' கதாபாத்திரம் குழந்தைகளுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப்போனது. இந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய காமெடி மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் வரத் தொடங்கியுள்ளன. அர்ஜுன் தாஸ் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு முறை எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என்று செய்திகள் பரவின. இதைக் கேட்டு என் உறவினர்களே கேட்கத் தொடங்கிவிட்டனர். தற்போதைக்கு எனக்கு எங்கேஜ்மென்ட்டோ, திருமணமோ இல்லை. அப்படி ஏதேனும் நடந்தால் நானே பிரஸ் மீட் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். மேலும், தவெக-வில் இணைவதற்கோ அல்லது அரசியலில் ஈடுபடுவதற்கோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை. எனது முழுக் கவனமும் சினிமாவில் மட்டும்தான் இருக்கிறது" என்றார். Bomb: 'நான் நடித்த படங்களிலேயே சுவாரஸ்ய அனுபவத்தை கொடுத்த படம் இதுதான்' - அர்ஜுன் தாஸ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below


