ரூ.2,100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான ‘தி ஓடிசி’ படம், உலகம் முழுவதும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, வெளியான முதல் வாரத்தில் ரூ.3,500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது ஹாலிவுட் திரைத்துறையில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ஓடிசி’. இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 17ம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்டோபர் நோலன் வெளியான ‘தி ஓடிசி’ திரைப்படம், கிரேக்க காவியமான ஓமரின் ஒடிசி கதையை மையமாகக் கொண்டு முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐமேக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்ட ‘தி ஓடிசி’ வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவிலும் தமிழில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ரூ. 3,500 கோடி வசூல் இந்நிலையில், ‘தி ஒடிசி’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ. 3,500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இத்திரைப்படம் ரூ. 2,100 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில் சிறந்த ஹாலிவுட் படமாக இந்தியாவில் ‘தி ஓடிசி’ கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-odyssey-collected-rs-3500-crore-in-its-first-week




