செவில்லா லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி, ரியல் பெட்டிஸ் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு சீசனில் ரியல் மாட்ரிட் தனது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது. முதல் பாதியில் கோல் இல்லை லா லிகா கால்பந்து தொடரில் செவில்லாவில் உள்ள லா கார்டுஜா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் -ரியல் பெட்டிஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது. பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், ரியல் பெட்டிஸ் கோல் கீப்பர் அல்வாரோ வால்யஸ் சிறப்பாக செயல்பட்டு கோல் விழாமல் தடுத்தார். இதனால் முதல் பாதி 0-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது. 81-வது நிமிடத்தில் கோல் இரண்டாவது பாதியிலும் ரியல் மாட்ரிட் கோல் அடிக்க முயன்றது. ஆனால் பலன் கிடைக்கவில்லை. அப்போது ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் டிராய் பாரட் கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து ரியல் மாட்ரிட் சமன் கோலுக்காக தீவிரமாக முயன்றது. எம்பாப்பே அப்போது இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. சமன் கோல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், கிலியன் எம்பாப்பே அடித்த அந்த பந்தை ரியல் பெட்டிஸ் கோல் கீப்பர் அல்வாரோ வால்யஸ் அற்புதமாக தடுத்தார். வெற்றிப் பயணம் முடிவு இறுதியில் ரியல் பெட்டிஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் ரியல் மாட்ரிட்டின் தொடர்ச்சியான வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/football/la-liga-real-madrid-suffer-first-defeat-of-season-after-1-0-loss-to-real-betis




