சென்னை ராயப்பேட்டையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கூட நிறைவடையவில்லை. இரண்டு மாதத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை பொருத்தவரை மக்கள் பாராட்டக்கூடிய காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஊழல் இல்லாத ஆட்சி முழுவதும் வந்துவிட்டதா என்று உறுதிமொழி கொடுக்க முடியாது. ஆனால் ஊழல் இல்லாத ஆட்சி கொடுப்பேன் என்று ஒரு முதலமைச்சர் சொல்வது போல், இதுவரை யாரும் சொன்னதில்லை என்பதுதான் முக்கியம். ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்றும் மிகத் தெளிவாக வெளிப்படையாக சொன்ன முதலமைச்சரை இப்போதுதான் நாங்கள் பார்க்கிறோம்.” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-other-chief-minister-has-ever-spoken-the-way-vijay-has-khader-mohideen




