நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்', 'எல்.ஐ.கே' என நான்கே படங்களில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இப்போது அவர், 'பி.ஆர்.ஷோ' என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கிவிட்டார். PR Show 1 - Pradeep Ranganathan Team இதன் முதல் படமாகத் தன்னுடைய கதையை 6 இயக்குநர்கள் ஒன்றாக இணைந்து இயக்கும் படத்தை பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கிறார். இந்த 6 பேரும், 'தி ஆல்ஃபா யூனிட்' என்கிற இப்படத்தை இயக்குகிறார்கள். இந்த 'தி ஆல்ஃபா யூனிட்' யார், அந்த குழு ஏன் ஸ்பெஷல் என்பதை இங்கு பார்ப்போம். பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் முதல் படத்தில் மமிதா பைஜூ, அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் படத்தை இயக்கும் 6 பேரும், பிரதீப் ரங்கநாதனின் குழுவில் இருந்தவர்கள்தான். யஷ், தனுஷ், விஷால், இளம்பரிதி, நரேந்திரகுமார், சாணக்கியன் ஆகிய 6 பேர்தான் இப்படத்தை இயக்குகிறார்கள். இவர்களில் யஷ் என்பவர் ஏற்கெனவே மக்களுக்குப் பரிச்சயம்தான். 'டியூட்' படத்தின் ஹைதராபாத் பிரஸ் மீட்டில், பிரதீப் ரங்கநாதன் தமிழில் பேச, அதனைத் தெலுங்கில் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்லிச் சமூக வலைதளங்களில் வைரலான அவரைப் பலருக்கும் நினைவிருக்கலாம். அவரும் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். அவரைத் தொடர்ந்து 'டிராகன்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சாணக்கியன் என்பவரும் இப்படத்தை இயக்குகிறார். இவர்கள் உட்பட இன்னும் நால்வர் இப்படத்தை இயக்குகிறார்கள். இதற்கு முன் 2 இயக்குநர்கள் காம்போவாகச் சேர்ந்து ஒரு படத்தை இயக்குவது என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்துச் சினிமாக்களிலும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், இரண்டிற்கும் மேற்பட்ட இயக்குநர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தை இயக்குவது இதுவே முதன் முறை. Pradeep Ranganathan Assistant Director தமிழில் வெளிவந்த 'சுயம்வரம்' படத்தை மொத்தமாக 14 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கியிருக்கிறார்கள்தான். ஆனால், இப்படத்தின் ஒவ்வொரு பகுதிகளை இந்த 14 இயக்குநர்கள் டைரக்ட் செய்து, ஒரே நாளில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள். அதேபோல, பாலிவுட்டில் வெளிவந்த 'எக்ஸ்: பாஸ்ட் இஸ் பிரசண்ட்' படத்தையும் மொத்தமாக 11 இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். அப்படத்தின் கதையின் ஒவ்வொரு பகுதிகளை இந்த 11 இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். ஆனால், ஒரே படத்தை மொத்தமாக 6 பேர் இணைந்து டைரக்ட் செய்வது இதுவே முதல் முறை. அதுதான் இந்த ஆல்ஃபா யூனிட்டின் ஸ்பெஷல்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/pradeep-ranganathan-produces-alpha-unit-movie-with-six-directors




