கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ராமர் மகன் மாணிக்கம் (வயது 24). இவருக்கும் கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து கல்வரா யன்மலை மகளிர் ஊர்நல அலுவலர் வேதநாயகி, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அதில் சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதும், தற்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மகளிர் ஊர்நல அலுவலர் வேதநாயகி கொடுத்த புகாரின்பேரில் மாணிக்கம், இவருடைய தந்தை ராமர், தாய் சரோஜா ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/marriage-of-a-17-year-old-girl-case-registered-against-three-individuals




