சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வுகள் இன்று நடந்திருந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 'எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உயர்வு வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார். எஸ்.பி.வேலுமணி எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ''தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தர வேண்டும். டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரவில் எம்.எல்.ஏக்களுக்கு 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக கொடுக்கிறார்கள். நமக்கு 3 கோடிதான் கொடுக்கப்படுகிறது. சிலர் தொகுதி மேம்பாட்டு நிதியை 10 கோடியாக உயர்த்த வேண்டும் என்கிறார்கள். குறைந்தபட்சம் 7 கோடியாகவாது உயர்த்த வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. முன்னாள் சட்டமன்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை 35000 ரூபாயிலிருந்து 70000 ரூபாயாக உயர்த்த வேண்டும். எஸ்.பி.வேலுமணி ஒரு லட்ச ரூபாய் மருத்துவப்படியை 2 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். அதேமாதிரி, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் கோவில் திருவிழா, கல்யாண வீடு என எல்லாவற்றுக்கும் செல்ல வேண்டும். ஒடிசாவில் மூணே முக்கால் லட்சமும் தெலுங்கானாவில் இரண்டரை லட்சம் ரூபாயும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. நம்முடைய எம்.எல்.ஏக்களுக்கும் சம்பள உயர்வு வேண்டும்.' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/we-need-to-attend-weddings-and-temple-festivals-sp-velumani-demands-higher-mla-salary




