ஜாய் கிரிசில்டா தன் மகனின் எதிர்காக உரிமைகளுக்காக போராடுவேன் எனத் தெரிவித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். டிஎன்ஏ சோதனை இதற்கிடையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான் தந்தை என டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க தயார் என சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்திருந்தது. குழந்தைக்கும் மாதம்பட்டி ரங்கராஜூவுக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, சோதனை செய்யப்பட்டது. இதில் ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா என்பது டி.என்.ஏ சோதனையில் தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து ஜாய் கிரிசில்டா தொடர்ந்து பதிவுகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். பின், இருவரும் சுமூகமான முடிவை எட்டியதாகத் தெரிகிறது. தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ‘ராகா ரங்கராஜ்’ என்றும் பெயரிட்டதை தெரிவித்தார். மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டு, “என் மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்தையும் கடந்த 6 மாதங்களாக முழுபொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப்பொறுப்புடனும், அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ஜாய் கிரிசல்டா இன்ஸ்டாகிராமில் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “ஒரு தாய் மட்டுமே உணரக்கூடிய போராட்டத்துடன் இருந்த இந்த பயணத்திற்குப் பின், என் மகன் அனைத்து குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய தனது உரிமையான அடையாளத்தையும், பொதுவான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறான். ஆனால், யாரும் ஒருபோதும் அமைதியாக அழுத, தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்ட அந்தத் தாயைப் பார்க்கவில்லை. தன் சிறு மகனுக்குத் தகுதியான உண்மையை வழங்க, ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நின்ற அந்தத் தாயைப் பார்க்கவில்லை. இந்தப் பயணம் யார் சரி, யார் தவறு என்பதை நிரூபிப்பதற்காக அல்ல. ஒரு குழந்தை அங்கீகரிக்கப்படவும், அன்பைப் பெறவும், பாதுகாக்கப்படவும் தகுதியானவன் என்பதற்காக மட்டுமே. இது எதையும் நிரூபிக்க வேண்டும் என்ற போராட்டம் அல்ல. இது யாரையாவது வெல்வதற்கான போராட்டமும் அல்ல. இந்த உலகில் உனக்கான அன்பும், மரியாதையும், உனக்குரிய இடமும் இருக்கிறது என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் நீ (மகன்) அறிய வேண்டும் என்பதற்காகவே போராடினேன். ராகா ரங்கராஜ், "நான் யார்?" என்று ஒருநாளும் குழப்பத்துடன் வளரக் கூடாது என்பதே என் ஒரே நோக்கம். இன்று, உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நிறைவேற்றியிருக்கிறேன். "வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும். உனக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்காக நான் ஒருபோதும் போராடுவதை நிறுத்த மாட்டேன்." எனத் தெரிவித்துள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-will-not-stop-fighting-for-my-sons-rights-joy-griselda




