சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னையில் பொது மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வை-பை (WIFI) குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் இன்று நடைபெற்றது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வை-பை (WIFI) வசதி ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான (Internet Service Providers) ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் இன்று (07.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்கள், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இலவச வை-பை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகள், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளிலும், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வை-பை (WIFI) வசதியினை ஏற்படுத்திட இதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/free-wi-fi-in-public-places-chennai-corporation-consults-with-service-companies




