சென்னை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 1970 களில் விவசாயத்திற்கான மின் கட்டணம் ஏற்றப்பட்டதை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அப்போதைய அரசாங்கம் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு 63 பேர் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையால் சுடப்பட்டார்கள். அதற்குப் பிறகு நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. விவசாயம் தொடர்ந்து விவசாயிகள் கட்டணமில்லா மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயத்தை செய்து வருகிறார்கள். இந்த வசதியால் மட்டும் தான் தமிழகத்தில் விவசாயம் தொடர்ந்து நடக்கின்றது. போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நினைவு தூண்கள் அமைத்து அந்தந்த பகுதி விவசாயிகள் வருடம் தோறும் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நாளில் நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அரசு வேலை கடந்த காலங்களில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க காரணமாக இருந்த, உயிர் நீத்த தியாகிகளுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றோம். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் அவர்கள். பல்வேறு அரசுகளிடம் கருணை அடிப்படையில் அரசு வேலை கோரிக்கை வைத்தும் அது நிறைவேறவில்லை. முதல்-அமைச்சர் தற்போதைய அரசு கரூரில் அரசியல் நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியிருப்பதை பார்க்கின்றோம். அரசியல் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்வதற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கக் கூடாதா? ஒவ்வொரு முறை மேடையில் பேசும்போதும் விவசாயிகளோடு உடனிருப்பேன் என்று பேசுகின்ற இன்றைய முதல்-அமைச்சர் கனிவோடு பரிசீலித்து விவசாய மின் கட்டண உயர்வுக்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு கருணையோடு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-jobs-on-compassionate-grounds-families-of-agricultural-martyrs-should-also-be-provided-er-easwaran




