திண்டுக்கல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல்லை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் 10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் இப்போட்டிக்கான டாஸை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் வீரர்கள் சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. நாராயண் ஜெகதீசன் இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் களமிறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும், நாராயண் ஜெகதீசன் அதிரடியாக விளையாடி 58 பந்துகளில் 90 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். முதல் வெற்றி இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை பதிவு செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-jagadeesans-brilliant-performance-chepauk-registered-their-first-win-by-defeating-dindigul




