பாரீஸ், சமீபத்தில் நிறைவடைந்த உலகக் கோப்பை கால்பந்து போட் டியில் பிரான்ஸ் அணி அரையிறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்று தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பறிகொடுத்தது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-6 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் அடங்கியது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே 8 கோல்கள் அடித்து தங்க ஷூ விருதை வென்றது மட்டுமே ஆறுதலாகும். இந்த போட்டியு டன் டிடியர் டெசாம்சின் 14 ஆண்டுகால பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் பணி முடிவுக்கு வந்தது. 2018-ம் ஆண்டில் பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்றது டெசாம்சின் பயிற்சியில் சிறப்பான செயல்பாடாக அமைந்தது. இந்த நிலையில் பிரான்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் 54 வயதான ஜிடேன் நியமிக்கப்பட இருக்கிறார். 1998-ம் ஆண்டு உலகக் கோப் பையை வென்றதில் முக்கிய பங்காற்றியவர் ஜிடேன். பிரான்ஸ் அணிக்காக 108 ஆட்டங்களில் ஆடி 31 கோல்கள் அடித்துள்ளார். ஓய்வுக்கு பிறகு ரியல்மாட்ரிட் கிளப்பின் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் ரியல்மாட்ரிட் அணி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், லா லிகா, கிளப் உலகக் கோப்பை, சூப்பர் கோப்பைகளை வென்று அசத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/football/zidane-to-become-france-coach




