தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ரீலீலாவின் நடனத்துக்குப் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'பராசக்தி' படத்தில் நடித்த அவர், தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'ஓம்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் புதிய கடைகள் திறப்பு விழாக்களில் ஸ்ரீலீலா அடிக்கடி கலந்து கொள்கிறார். மேலும் ரசிகர்களை நேரடியாக சந்தித்தும் பேசி வருகிறார். அவர் கூறும்போது, "ரசிகர்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் காட்டும் அன்பும், ஆரவார வரவேற்பும் என்னை திக்குமுக்காடச் செய்கிறது. நான் பணம் சம்பாதிக்கும்போதும், புகழடையும்போதும் கூட இந்த மகிழ்ச்சி கிடைத்தது இல்லை. ரசிகர்களால் மட்டுமே எல்லாமே சாத்தியமாகிறது. இத்தகைய அன்பை பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்காக நடிகையாக இருப்பதற்கே நான் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/everything-is-possible-only-because-of-fans-sreeleela




