தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (NATIONAL SKILL DEVELOPMENT CORPORATION) என்னும் அமைப்பு 2008 ஆம் ஆண்டு பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக (PULIC -PRIVATE PARTNERSHIP) தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின( MINISTRY OF SKILL DEVELOPMENT AND ENREPRENEURSHIP) கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் திறமைகளையும் வாய்ப்புகளையும் இணைப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். அதாவது, சாதாரண மக்களைக் கூட தரமான சிறந்த வேலைகள் செய்வதற்கு ஏற்ற திறமைகள் கொண்டவர்களாக மாற்றுவதற்கான பல்வேறு பயிற்சிகளை வழங்கும் அமைப்பாக இது திகழ்கிறது. மிகச் சிறந்த சாதனைகள் புரிவதற்கு முதலில் தன்னம்பிக்கை தேவை. அந்தத் தன்னம்பிக்கை வளர்ப்பதற்கான அடிப்படை பயிற்சிகளை இந்த அமைப்பு வழங்குகிறது. இதன் மூலம் சிறந்த ஆற்றல் கொண்ட வல்லுனர்களை உருவாக்க இயலும். “திறன்கள் அதிகம் கொண்ட மக்கள் கொண்ட இந்தியா உருவாகும்போது ஒவ்வொரு குடும்பமும் வளரும் வணிக நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். சமூகங்களின் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இதன்மூலம் இந்தியா ஒரு வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்” என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. ஒருவர், தான் பணியாற்றும் நிறுவனத்தில் சிறந்து விளங்குவதற்கு தேவையான அடிப்படை அறிவு மற்றும் தகுதிகள் ஆகியவற்றை வழங்கி, திறன்களை மேம்படுத்த உலக அளவிலான மதிப்புமிக்க குறுகிய கால திறன் சான்றிதழ்களை (MICRO CREDENTIALS) இந்த அமைப்பு வழங்குகிறது. இதனை "மைக்ரோ க்ரேடன்சியல்ஸ் "என்று அழைக்கிறார்கள்.உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்குவதால் இந்த சான்றிதழ்கள் எளிதில் வேலை வாய்ப்புகள் பெற துணை நிற்கின்றன. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் ஸ்கில்ஸ் (INDIAN INSTITUTE OF CREATIVE SKILLS) (IICS) படைப்பாற்றல் கலைகள்,ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் திறன்களை வளர்க்க உதவும் சிறந்த நிறுவனமாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் ஸ்கில்ஸ் (INDIAN INSTITUTE OF CREATIVE SKILLS) (IICS) என்னும் அமைப்பு திகழ்கிறது. அனுபவ பயிற்சிகளை வழங்குவதன்மூலம் கற்றலை எளிதாக்கி திறன்களை வளர்க்க உதவுகிறது. தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. நவீன வசதிகள் மற்றும் சிறந்த வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் திறன்களை எளிதில் வளர்க்க உதவுகின்றன. சிறந்த பயிற்சிகள் “இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் ஸ்கில்ஸ்” என்னும் அமைப்பின் மூலம் பல்வேறு கலைகளையும், திறமைகளையும் வளர்ப்பதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சிகளை அனைத்தும் தனித்தனியான பள்ளிகள் மூலம் நடத்தப்படுகின்றன. அவை பற்றிய விவரம் வருமாறு 1. நிகழ்த்து கலைகள் மற்றும் ஊடக மேலாண்மைப் பள்ளி ( SCHOOL OF PERFORMING ARTS AND MEDIA MANAGEMENT) 2. ஒலி மற்றும் இசைத் தயாரிப்புப் பள்ளி (SCHOOL OF SOUND AND MUSIC PRODUCTION) 3. நியூ ஏஜ் மீடியா பள்ளி (SCHOOL OF NEW AGE MEDIA) 4. நிகழ்வுகள் மற்றும் அனுபவ ஊடகப் பள்ளி (SCHOOL OF EVENTS AND EXPERIENTIAL MEDIA) 5. படைப்பாக்கத் தொடர்பாடல் பள்ளி ( SCHOOL OF CREATIVE COMMUNICATION) 6. டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கப் பள்ளி (SCHOOL OF DIGITAL CONTENT CREATION) இந்திய விமான திறன் நிறுவனம் (INDIAN INSTITUTE OF AVIATION SKILLS –(IIAS) விமானத்துறையில் மிக சிறந்து விளங்க தேவையான தொழில்நுட்பம் செயல்பாடுகள் மற்றும் தலைமை பண்புத்திறன்களை மாணவர்கள் இடம் வளர்க்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட நிறுவனம் இந்திய விமான திறன் நிறுவனம் ஆகும். இந்தியாவில் விமானத்துறையில் உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இங்கு விமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியா மற்றும் வெளிநாட்டு சர்வதேச விமான துறையில் பணிபுரிய மிக திறமையான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு இந்த அமைப்பு மிகவும் பக்கபலமாக அமைகிறது. அதி நவீன உள்கட்டமைப்பு, சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் அருமையான தொழில் கூட்டான்மைகளை பயன்படுத்தி இங்கு உலக தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விமான பயிற்சிகள் வழங்கப்படுவதால் திறமை வாய்ந்த விமானிகளை இங்கு உருவாக்குகிறார்கள். மேலும் விமான துறையில் சிறப்பு பெற்ற பொறியாளர்களையும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்ட அவர்களையும் உருவாக்க இங்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சிறந்த பயிற்சிகள் இங்கு வழங்கப்படும் சில முக்கிய பயிற்சிகள் பற்றிய விவரம் 1. விமானப் பணிக்குழு பயிற்சி (CABIN CREW TRAINING) 2. விமான நிலையத் தரை சேவைகள் (AIRPORT GROUND SERVICES) 3. விருந்தோம்பல் மற்றும் வாடிக்கையாளர் சேவை (HOSPITALITY & CUSTOMER SERVICE) 4. பயண மற்றும் சுற்றுலா மேலாண்மை (TRAVEL AND TOURISM MANAGEMENT) 5. விமான சரக்கு மற்றும் தளவாடங்கள் (AIR CARGO AND LOGISTICS) 6. மென் திறன்கள், ஆளுமை மேம்பாடு மற்றும் நேர்காணல் தயாரிப்பு (SOFT SKILLS, GROOMING & INTERVIEW PREPREPATION) வசதிகள்- வாய்ப்புகள் இங்கு விமான துறையில் சிறந்து விளங்குவதற்கு தேவையான ஏராளமான வசதிகளும் வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக, நன்றாக உருவகப்படுத்தப்பட்ட விமான அறை, அதிநவீன ஆய்வகங்கள், நவீன வகுப்பறைகள், மொழிகள் பயிற்சி வழங்க ஆய்வகங்கள், ஆளுமையை வளர்ப்பதற்கு தேவையான வசதிகள், செய்முறை பயிற்சிக்கான கருவிகள் போன்ற வசதிகள் உள்ளன. மேலும், அதிநவீன உருவகப்படுத்துதல் ஆய்வகங்கள் மூலம் மாதிரி விமானங்கள் மாதிரி விமான நிலைய அமைப்புகள் ஆகியவற்றை நேரடியாக பயிற்சி வழங்கும் வசதிகள் உள்ளன. இவைகள் தவிர நேர்காணல் தயாரிப்புக்கு உதவும் வகையில் பயிற்சிகள் தொழில்துறை வல்லுநர்கள் மூலம் சிறப்பு பயிற்சிகள் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் போன்றவையும் இங்கு வழங்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கு ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ, விஸ்தாரா மற்றும் எமிரேட்ஸ் ஆகிய முக்கிய இந்திய மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற விமான நிறுவனங்களில் பணிபுரிய அதிக வாய்ப்புகள் உள்ளன. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறையால் சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள் (GLOBALLY RECOGNIZED INDUSTRY CERTIFIED MICRO-CREDENTIALS) தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (NATIONAL SKILL DEVELOPMENT CORPORATION) தொழில் துறையில் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளில் பணி புரியும் தனி நபர்களின் சிறப்பு திறமைகளை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். எனவே இந்த நிறுவனம் தொழில் துறையுடன் இணைந்து பல நுண் சான்றிதழ்களை வழங்குகின்றன இந்த சான்றிதழ் படிப்புகள் எல்லாம் தொழில் துறையில் சிறப்பு பெற்ற அமைப்புகளோடு இணைந்து உருவாக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், இந்த பயிற்சிகளில் சேருபவர்களுக்கு தொழில்துறை நிறுவனங்களும் இணைந்து சான்றிதழ்கள் வழங்குகின்றன. இதனால்,,தொழில் துறைக்கு தேவையான திறன்களையும், எதிர்கால தொழிலாளர் தேவைகளுக்கு ஏற்ற பயிற்சிகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நுண் சான்றிதழ் படிப்புகள் யாவும் மிக குறுகிய கால படிப்பாகும். வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த இந்த பயிற்சிகள் மிகவும் உறுதுணையாக அமைகின்றன. வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கும், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் அதிக பலன் உள்ளதாக அமைகின்றன. இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (INDIAN INSTITUTE OF TECHNOLOGY), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (INDIAN INSTITUTE OF MANAGEMENT), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரின் ட்ரேட் (INDIAN INSTITUTE OF FOREIGN TRADE) மற்றும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் (NATIONAL INSTITUTE OF DESIGN) ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், இங்கு பயிற்சி வருபவர்களுக்கு மிகச்சிறந்த வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த பயிற்சிகள் எல்லாம் குறுகிய காலத்தில் வழங்கப்படுவதாலும், உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களோடு இணைந்து சான்றிதழ்கள் வழங்கப்படுவதாலும் இவை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த படிப்புகளாக கருதப்படுகின்றன. தொடர்பு கொள்ள. மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி NATIONAL SKILL DEVELOPMENT CORPORATION KAUSHAL BHAWAN, 5TH-6TH FLOORS, NEW MOTI BAGH, NEW DELHI – 110023 PHONE: 011 – 71600050 EMAIL: enquiry@nsdcindia.org WEBSITE: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/education-and-employment/national-skill-development-corporation-training-programs-full-details




