சென்னை, ஆன்லைன் மோசடிகளுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாக தமிழ்நாடு முழுவதும் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணி மியூல் அக்கவுண்ட் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஆன்லைன் வழியில் கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்படும் மோசடிகள் தொடர் கதையாகியுள்ளன. 'சைபர்' மோசடி செயல்களில் அபகரிக்கப்படும் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் அனுப்பப்பட்டு எடுக்கப்படுகிறது. இத்தகைய வங்கி கணக்குகள் மணி மியூல் அக்கவுண்ட் (Money Mule) என போலீசார் அழைக்கின்றனர். வங்கியில் இருந்த அந்த பணத்தை எடுத்து கொடுப்பதற்காக கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. சிறப்பு அதிரடி நடவடிக்கை இந்த கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலர் மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்து வருவதை சென்னை ‘சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் சென்னையில் கடந்த 2 நாட்களில் 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மோசடி பணத்தை பதுக்கும் மணி மியூல் வங்கி கணக்குகள் தொடர்புடைய 800 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 800 பேர் கைது இதன்படி, இந்த மோசடி தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள 800 பேரிடம் போலீசாரின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/800-arrested-across-tamil-nadu-for-renting-out-bank-accounts-for-online-scams-in-exchange-for-a-commission




