தஞ்சாவூர், தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நடந்த தெப்பத் திருவிழாவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் முத்துப்பல்லக்கு, பூச்சொரிதல், திருவிளக்கு பூஜை ஆகியவையும், ஆவணி மாதம் ஆண்டு திருவிழாவும், கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், புரட்டாசி மாதம் தெப்ப உற்சவமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து முக்கிய வைபவமான தெப்பத் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் அம்மன் வலம் வருவதற்கு வசதியாக மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்ப மிதவை தயாரிக்கப்பட்டது. இரவு பூஜைகள் முடிந்து அம்மன் புறப்பாடும், கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தெப்பக்குளத்தில் வலம் வந்த அம்மன் பின்னர் அங்கிருந்து அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு தெப்பக்குளத்தில் உள்ள தெப்ப மிதவையில் எழுந்தருளி வலம் வந்தார். இதைத்தொடர்ந்து பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன. தெப்பக்குளத்தில் வலம் வந்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், கோவிலில் இரவு 8.30 மணி முதல் நாதஸ்வர தவில் இசை, பக்தி இன்னிசை, வயலின் இன்னிசை, வீணை இன்னிசை ஆகியவை நடைபெற்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/float-festival-at-punnainallur-mariamman-temple




