சயிப் அலிகான், அக்சய் குமார் இணைந்து நடிக்கும்‘ஹைவான்’ படம் வரும் செப்டம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, 'சர்பிரா', 'கேல் கேல் மெய்ன்' மற்றும் சிங்கம் அகெய்ன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சயீப் அலிகான். இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தெலுங்கில் ‘தேவரா’ படத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் சயிப் அலிகான் மற்றும் அக்சய் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ஹைவான். இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படம் 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ‘ஒப்பம்’ படத்தை அடிப்படையாகக் கொண்டது. கே.வி.என் புரொடக்சன்ஸ் வெங்கட் கே நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் பென்னின் தெஸ்பியன் பிலிம்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், சயாமி கெர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சயிப் அலிகான் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரியில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில், சயிப் அலிகான், அக்சய் குமார் இணைந்து நடிக்கும்‘ஹைவான்’ படம் வரும் செப்டம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்சய் குமார் நடித்த ‘பூத் பங்களா’ படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. Some monsters don’t live under the bed. They live among us. Are you ready? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/saif-ali-khan-and-akshay-kumar-starrer-haiwaan-release-date-announced




