பெங்களூரு கர்நாடகாவில் நடைப்பயிற்சி சென்ற முதியவர் காட்டு யானை தாக்கி பலியான சோக சம்பவம் ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரு நகரில் மைசூர் சாலையில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனை அருகே அஞ்செபால்யா என்ற இடத்தில் நாகராஜ் என்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், தன்னுடைய மகளுடன் இன்று காலை 5.30 மணியளவில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். காட்டு யானை அப்போது அந்த வழியே சென்ற காட்டு யானை ஒன்று அவரை கடுமையாக தாக்கியுள்ளது. உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆர்.ஆர். மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்ச்சியாக அந்த யானையை கண்டறிந்து, பிடிப்பதற்காக வன துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றனர். கூலி வேலைக்கு சென்று வந்த நாகராஜுக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிப்பவர்களிடையே பெரும் சோகம் ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/karnataka-elderly-man-on-morning-walk-killed-by-wild-elephant




