கொழும்பு, இலங்கையின் மத்திய மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மலைப்பாங்கான பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 7 பேர் பலி இந்நிலையில், இலங்கையில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/heavy-rain-and-floods-in-sri-lanka-7-killed




