நாகர்கோவில், ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஏராளமான பக்தர்கள நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். நாகராஜா கோவில் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷமாகும். இதனால் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி, இன்றும் அதிகாலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் கடந்த 2 வார ஞாயிற்றுக்கிழமைகளை காட்டிலும் இன்று அதிக அளவிலான மக்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். உள்ளூர், வெளியூர் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்தனர். பலர் கைக்குழந்தைகளோடு வந்தனர். கோவிலின் வெளியே உள்ள பிரதான நுழைவு வாயில் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தும், மஞ்சள் பொடி தூவி அபிஷேகம் செய்தும் வழிபட்டனர். ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தன. பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால், நேற்று மதியம் நடை சார்த்துவது சற்று தாமதம் ஆனது. பக்தர்கள் வசதிக்காக அவர்களுக்கு தேவையான பூஜை பொருட்கள் கோவில் வளாகத்துக்குள்ளேயே விற்பனை செய்யப்பட்டது. மேலும் சிறப்பு கட்டண தரிசனத்தில் பால், மஞ்சள், பூ, பழம், பால் பாயாசம், ஊதுவத்தி, தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. மதியம் கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டன. தற்காலிக கடைகள் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களின் வாகனங்கள் நாகராஜா திடலில் நிறுத்தப்பட்டு இருந்ததால், திடல் முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் கோவில் செல்லும் சாலையின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் வளாகத்தில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. போலீசார் சீருடையிலும், மப்டி உடையிலும் பாதுகாப்பு பணி மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/aavani-third-sunday-devotees-milk-and-turmeric-abishekam-for-naga-idols




