சென்னை, சட்டசபையில் மிசா குறித்து முதல்-அமைச்சர் விஜய் பேசியதற்கு திமுகவினர் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா நடவடிக்கையின்போது சிறையில் நடந்தது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கமாக பேசினார். இதற்கு பதில் அளித்த தவெக ஐடி விங், “பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? என விமர்சித்தது. இந்த நிலையில், தவெக ஐடி விங்கிற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக ஐடி விங் காட்டமான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான். வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள். மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் மிசா கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்? பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்! Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது? முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதல்-அமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான். நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் மிசா சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு. கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும். இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள். வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள். காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/misa-was-not-about-rolling-on-a-cotton-mattress-it-was-a-reality-involving-bloodshed-in-prison-dmk




